மூங்கிலில் மட்டும்தான்
குழலிசை இசைக்கமுடியுமா?
என்னவள் என்
மூச்சுக் குழலிலும் தான் இசைக்கிறாள்
முத்தத்துவாரம் வழியாக.
என்ன, ஒரே ஒரு வித்தியாசம்
முதல்சொன்னதில் உள்சென்று
இசைதந்த காற்று
இரண்டாவதில் உறிஞ்சப்பட்டுஇசைதருகிறது...
Monday, December 29, 2014


நேற்றிரவு ஒரு பயங்கரமான கனவு ...
யாரென்றே தெரியாத,
கோட் சூட் அணிந்த சில வெளிநாட்டவர்களும்,
சில உள்ளூர் காக்கி சட்டைகளும் நம் வீட்டின் முன்பே கும்பலாய்.
என்னை அழைத்து உன்னை கேட்கிறார்கள், நீ திருடீ என்று...
நான் ஆவேசபட்டவனாய் ஏன்? எதற்கு? என்ன காரணம்? என்று கேட்டால் அவர்கள் கூறியது...
வர வர நிலவின் ஒளி குறைந்து கொண்டே செல்கிறதாம்...
தமிழகத்தின் ஒரு பகுதியில் மட்டும் அளவுக்கு அதிகமாய் பிரகாசிக்கின்றதாம்...
அலசி ஆராய்ந்ததில் அது நம் வீடு என்றறிந்து இங்கு வந்துள்ளனர்...
ஆதாவது நிலவொளியை நீ திருடிகொண்டாயாம்...
அவர்கள்...


மழையில் நீ விளையாடுவதை பார்க்கும் பொழுது...
மழை என்பதே
உன்னை தொட்டு விளையாட
வருணன் ஏற்படுத்திக் கொண்ட ஓர் வழிவகை தானோ!...என்று என்னதோனுகின்றது...
மழைபெய்யும் பொழுது நனைவதுமரங்களும், மனிதர்களும்இப்புவியில் உள்ளஇன்னபிற பொருட்களும் மட்டுமல்லாதுநேசம் கொண்ட இரு உள்ளங்களும் தானே!
நம்மைத்தவிர வேறு எவரோருவரால்இந்த மழையின் ஒவ்வொரு துளிகளையும்ருசித்திருக்க முடியும்...
நனைவது அழகாஇல்லை நனைவதை ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்உன்னை நனைவிப்பது தான் அழகு என்றுஜோராய்...


மண்ணில் வந்தாள் மணித்தாரகை
இவள் இறகு இல்லாத என் தேவதை.
இன்று கண்டாள் உதயவிழா
என் கைகளில் மிதக்கின்றாள் இந்த வெள்ளிநிலா.
நகர்ந்தாடும் நந்தவனம்இனியிவளே என் வீட்டின் பூந்தோரணம்.நிலவொளியாய் இவள் வதணம்இவளே நான் இசைத்த முதல் சரணம்.உனை கையேந்திய நேரம், அதுஒரு துளி கண்ணீர்ஓராழி சந்தோசம்இப்படிக் கலவையான ஓர் கனம்.எனை அப்பனாக்கி பிறந்த ஏந்திழை, இவள் என் மகள...
Subscribe to:
Posts
(
Atom
)