என் காதல் கணவா
ஏன் இப்படி?
காதலிக்கும் போது கை பிடிக்க
அனுமதி வேண்டியே அவ்வளவு
கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி.
என் இதழ் தீண்டாதா என நீ
ஏங்கிய நாட்களை நானறிவேன்....
விண்ணவரும் வியந்து போகும் பேரழகு
அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு.
தரைதொடும் உன் கார் குழலென்ன
கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா
நிலவினை வெட்டி ஒட்டி
வைத்ததுதானா உன் நெற்றி
பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள்
புலியெனப் பாயவரும் என்னை
சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து
எனை அடக்குவதென்ன....
எழுவாய் தமிழனே எழுவாய்!
வந்துவிட்டது தைத் திருநாள்.
வாசனை திரவியங்கள் மணக்கும்
மேனி கொண்ட நமக்கு
கருக்கலில் கண்விழித்து
காளை பூட்டி ஏர் உழ
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
முப்போகம் விளைவித்தவனின்
முன்னுரை தெரியுமா?
அரிசியினை அன்னமாய்
மட்டுமே அறிந்த நமக்கு
நெல்லினை தெய்வமாகவும்
அரிசியினை பிரசாதமாகவும்...
என்ன செய்வது
மீசை முளைக்கும் முன்னமே
ஆசை முளைத்து விடுகின்றது.
பாடங்கள் பதியாத என் மனதினில்
பாவை உந்தன் முகம் மட்டும்
பார்த்த கனமே ஒட்டிகொண்டது.
உன்னிடம் சந்தேகம் கேட்பதற்க்கென்றே
பாடங்களின் தலைப்பை மட்டும்
பதிந்து கொண்டேன்.
கரும்பலகையினில் எழுதி ரசித்தேன்
உன் பெயரினை, கார் வானில்
கண்ட முழுநிலவென.
...
உனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
அழகான அந்தி நேரம்
கருவேலங் கம்மாக்கரை ஓரம்.
அழகாய் சலசலக்கிறது நீரோடை
கரையினை வந்து வந்து தழுவியபடி.
ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு
மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி
முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது
காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில்.
காற்றாய் வந்த காதலன் தீண்டிய
தீண்டலுக்கெல்லாம...