Friday, March 6, 2015

பெண்களே!!! சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தூரம் கடந்து விட்டர்கள். ஒரு காலத்தினில், ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட நீங்கள் இன்று ஏடுகளில் எழுதப்படுகிறீர்கள். சமையலறை தாண்டாத நீங்கள் இன்று சந்திராயனிலும் சாதித்தீர்கள். அங்கம் மட்டுமே கொடுத்துவந்த நீங்கள் நாட்டிற்கு தங்கமும் வென்று கொடுத்தீர்கள். ஆடவரால் ஆளப்பட்ட நீங்கள் இன்று அரசாளுகிறீர்கள். ஒப்பனைப் பதுமைகள் என்ற எண்ணம் கொன்று ஒப்பிலாப்...

Saturday, February 28, 2015

என் கணவா எப்போதடா வீடு திரும்புவாய். நீ கட்டிய தாலி என் மார்பினில் மோதி ஏதேதோ சொல்கிறது. சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென. வந்தாய் பசியோடு சுவைத்தாய் ருசியோடு. பரிமாறினேன் உன்னிடம் பசியமர்ந்தாய் என்னிடம் நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய். என் பசி கேட்டாயா? என் கணவா எழுந்திடு மீதமிருக்கிறது இன்னும்.&nbs...

Saturday, February 14, 2015

உன்னிடம் சொல்லாத வார்த்தைகள் என் கவிதைகளின் வரிகளாகின்றன உன்னிடமும் சொல்லியிருக்கிறேன் ஆனால் அதை நீ ரசிக்கவில்லை என் கவிகளுக்கு வரிகளானபின் அவை கொண்டாடப்படுகின்றன. . . . பல காதலிகளால...

Saturday, February 7, 2015

பரந்து விரிந்ததோர் ஆறு கண்டேன் அதிலென்மனம் பாய்ந்தோடக் கண்டேன். வழியெங்கும் நாணல் பூ வெண்சாமரம் வீசக்கண்டேன். அயிரை மீன்கள் அணிவகுத்தென் அடிப் பாதம் தீண்டக் கண்டேன். தாழப் பறக்கும் மீன்கொத்தி தன் இரைகவ்விச் சென்றிடக்கண்டேன். நான் நதியாகிப் போனேன். காலைப் பொழுது தனில் சோலை மரங்கள் என் மேல் பூக்களை வாரி இறைப்பது கண்டேன்....

Wednesday, February 4, 2015

ஒரு விடுமுறை தினம் எனது கிராமத்து பேருந்து நிலையம். துண்டால் தலை பொத்தி குத்தவைத்து இருமிக்கொண்டே ஒரு பெரியவர். அவரருகினில் அவரின் மனைவி வந்ததிலிருந்து அவரை திட்டியபடியே இருக்கிறாள். "நீயெல்லாம் இன்னும் உசுர வச்சுட்டு என்னத்துக்கு இருக்குர பூமிக்கு பாரமா. வயசுல குடியும் கூத்தியாளும்னு கும்மாளம் போட்ட இப்ப சீக்கு வந்து கஞ்சி ஊத்தகூட நாதியில்லாம திரியுற. பெத்த புள்ள கூட மதிக்கலன்னப்பறமும் ஒரைக்லையா...
Tricks and Tips