Monday, January 26, 2015



















அனைவருக்கும் இனிய குடியரசு தின  நல்வாழ்த்துக்கள்

நம்மை மன்னன் ஆண்டான்
மாற்று தேசத்தான் ஆண்டான்
இது நாம் ஆண்டுகொண்டிருக்க
வேண்டிய தருணமிது.

ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு
ஆனாலும் இன்றளவும்
நமை ஆள்வது நாம் தானா.


இனம் ஒருபுறம்
மதம் ஒருபுறம்
சாதி ஒருபுறம்
சக்தி படைத்தவனின்
சதி ஒருபுறம்

இவ்வாறு பல்வேறும்
நமை பலவாறும்
ஆண்டுகொண்டிருக்கிறது.

நமக்கான குடியுரிமையை
நாம் பயன்படுத்துகிறோம?

நமையாள்பவரை நாம் தேர்ந்தெடுக்க
உரிமை கொண்ட போதிலும்
ஆண்டான் அடிமையாய்
இன்னும் இருப்பதேன்.

ஏட்டளவில் நாம் குடியுரிமை பெற
எண்ணற்றோர் இன்னுயிர் கொடுத்தனர்.

ஏடில் இருப்பது எழுச்சிபெறுவது
நம் கையிலும்
விரல் சுமக்கும் மையிலும்
தான் உள்ளது.

0 comments :

Post a Comment

Tricks and Tips