Sunday, January 25, 2015


என் காது மடல் வருடி
நீ இட்ட முத்தத்திலே
புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை
துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை.

காதினில் தொடங்கி
கழுத்தேறி வளைந்து
பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து
மணிக் கழுத்தினில் ஒன்று
கீழ் இறங்கி மார்பினில் ஒன்று
என நீ கொடுத்த முத்தத்தில்
கிறங்கிப்போனேன்.

என் உடல் மணக்கிறது
உன் எச்சிலின் ஏகாந்த வாசம்.

என்ன வரைகிறாய் என் முதுகினில்.


உன் விரல் வைத்த புள்ளியிலும்
நீ வருடிய வளை கோடுகளிலும்
ஓவியப் பாவையானேன்.

அசிங்கம் பிடித்த ஆடைகள் தான்
நம்மை தனித் தனியாய் காட்டியிருக்கிறது.

களைந்த பின்பு ஒட்டிக்கொண்டோம்
ஒருவரில் ஒருவராய்.

அந்தப்புறம் தனில் ஆதிவாசிகளாய்
இருப்பதே அழகாய் இருக்கிறது.

பாதாதி கேசம் வரை
படர்கிறது நீ கொடுத்த கொடி முத்தம்
பற்றிப் படர்கிறது என்னிரு புறமும்.

என் வெட்கம் தனை நீ எடுத்து
பெண்ணென நாணி நிற்கிறாய்

உன் ஆண்மையனிந்து திமிறி நிற்கிறேன்
நான் ஆசை முறுக்கி.

இப்போது நான் ஆரம்பிக்கிறேன்
உன் காது மடல் வருடி...

0 comments :

Post a Comment

Tricks and Tips