தாமரை பூங்குளத்தினிலே
தங்கம் நீ குளிக்கையிலே
அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி
ஓடி வந்து உன பாக்கயிலே.
மாரளவு தண்ணியிலே
மகராசி நீ குளிக்கையிலே
தன்னழகு கொரஞ்சதா என்னி
அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும்.
உன் மேலாடையானது பாவாடை
உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை.
பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூட
உன்னழகு திண்டே உயிர் வாழ்ந்திருப்பேனே.
உன் கெண்டைகால் கடிச்சு ஓடும்
கெண்ட மீன் வாங்கி வந்த வரமென்ன.
நீ மஞ்சள் அரச்ச கல்லெடுத்து
தொங்கவிடப்போறேன் என் வீட்டு மாடத்திலே.
நீராடி நீ முடிச்சு நாலு படி ஏறிவந்தா
படித்தொர பாறாங்கல்லும்
பஞ்சு போல மெதக்குதடி.
நீ தலை உலர்த்தும்அழகு
கண்ட மாமனுக்கு
யாத்தே தலைக்கிறுக்கு ஏறுதடி.
குனிஞ்ச தலை திருப்பி என நீ பாக்கையிலே
மூச்சடச்சு கெடக்குறேனே பேச மறந்து.
உன் மேல பட்ட ஓடைக்காத்து கூட
வாடைகாத்தா மணக்குதடி.
நீ குளிச்ச தண்ணி மோந்து போயி
நான் குடிப்பேன் புள்ள
நானிருக்கும் நாள் வரைக்கும்.
0 comments :
Post a Comment