Saturday, February 7, 2015


பரந்து விரிந்ததோர் ஆறு கண்டேன்
அதிலென்மனம் பாய்ந்தோடக் கண்டேன்.

வழியெங்கும் நாணல் பூ
வெண்சாமரம் வீசக்கண்டேன்.

அயிரை மீன்கள் அணிவகுத்தென்
அடிப் பாதம் தீண்டக் கண்டேன்.

தாழப் பறக்கும் மீன்கொத்தி
தன் இரைகவ்விச் சென்றிடக்கண்டேன்.

நான் நதியாகிப் போனேன்.

காலைப் பொழுது தனில்
சோலை மரங்கள் என் மேல்
பூக்களை வாரி இறைப்பது கண்டேன்.


நதிக்கரைதனில் ஜோடிக் கிளிகளிரண்டு
கொஞ்சிடக் கண்டேன்.

நில்லாது காடோடி சென்றேன்.

வைகை கண்டேன்
காவிரி கண்டேன்

கல்லணை நின்று மன்னன் மகனிடம்
மணிக்கணக்கில் பேசிச்சென்றேன்.

பாசன வாய்க்காலில் பாய்கையில்
பரவசம் கொண்டேன்.

சேற்றினில் நட்ட நாற்று கண்டேன்
நாற்று தொட்ட காற்று கண்டேன்.

அறுவடை நெல்லிடம்
சொலவடை பேசிச் சிரித்தேன்.

நீராவியாகி வானம் சென்றேன்
கார்முகிலாகி காத்து நின்றேன்

மழையாகி பொழிந்து பாய்ந்தோடிட...

0 comments :

Post a Comment

Tricks and Tips