Monday, January 19, 2015














விண்ணவரும் வியந்து போகும் பேரழகு
அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு.

தரைதொடும் உன் கார் குழலென்ன
கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா

நிலவினை வெட்டி ஒட்டி
வைத்ததுதானா உன் நெற்றி

பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள்
புலியெனப் பாயவரும் என்னை
சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து
எனை அடக்குவதென்ன.


பனைமர உட்சியிலாடும்
தூக்கணாங் குருவி கூடு
உன் மூக்கென ஆனதோ

கூட்டிலென்ன மின்னுவது
ஓ! உன் வைர மூக்குத்தியோ

கோவை பழமென சிவந்த உதடு
ஒரு மரக் கள் வடிக்கிறது.

ஆழ் கடல் கண்டெடுத்த வெண்சங்கெடுத்து
செய்தது தானா உன் மணிக் கழுத்து

மார் விளைந்த மாதுளங் கனிகளின்
பாரம் தாங்காமல் சாய்ந்தாடுகிறது
உன் கொடியுடல்.

இடை!  இல்லாத ஒன்றை
என்ன சொல்லி வர்ணிப்பது.

வாழைத் தண்டென வழவழக்கிறது
உன் கால்களிரண்டும்.

பூமி தொடா பிள்ளையின் பாதமென
உன் பிஞ்சு பாதங்கள்.

பாதுகைக்கு அளவு கேட்டு வாசல்
வந்திருக்கிறது வான் மேகங்கள்.

தலைகீழாய் தொங்கும் வீணையென
உன் பின்னழகு.

மீட்டசொல்லி அழைக்கிறது
உன் முன்னழகு.

இன்னும் வர்ணிக்கப் படாத
பாகங்களை பற்றி எழுதினால்
காகிதமும் கசிந்து விடும்?....காதலை!!!

0 comments :

Post a Comment

Tricks and Tips