Sunday, January 11, 2015














என்ன செய்வது
மீசை முளைக்கும் முன்னமே
ஆசை முளைத்து விடுகின்றது.

பாடங்கள் பதியாத என் மனதினில்
பாவை உந்தன் முகம் மட்டும்
பார்த்த கனமே ஒட்டிகொண்டது.

உன்னிடம் சந்தேகம் கேட்பதற்க்கென்றே
பாடங்களின் தலைப்பை மட்டும் 
பதிந்து கொண்டேன்.

கரும்பலகையினில் எழுதி ரசித்தேன்
உன் பெயரினை, கார் வானில் 
கண்ட முழுநிலவென.


லீடராய் நீ இருந்ததாலேயே
தேர்வினில் தோற்றேன் 
பாடம் சொல்லவாவது 
பாவி நீ பேசுவாயென.

ஆண்டு விழாவினில் நான் சொன்ன
காதல் கவிதையினை ரசித்த 
நீ ஏன் உன்னிடம்
கவிதையாய் என் காதலை 
கூறிய போது ஏற்க மறுத்தாய்.

இளையராஜா இசைத்த எல்லாம் 
என்னக்காகவே என்றிருந்தேன்.
இன்று சோக கீதம் மட்டும் 
கேட்க வைத்ததேன்.

நீ செல்லும் வழிகளெல்லாம் 
காவல் செய்தேன்.
நீ சொல்லும் மொழிகளுக்கெல்லாம் 
ஏவல் செய்தேன்.
கலையழகி உன்னை கண்ணிமைக்காமல் 
காதல் செய்தேன்.

அந்த மேற்குத் தொடர்ச்சி மலை
மேகங்களை கேட்டுப் பார், எத்தனை முறை 
தனியனாய் நின்று உன் பெயரினை
உரக்க கத்தியிருப்பேன் என்று.

மலை கூட மழை பொழிந்தது
உன் பெயர் கேட்டு.

நீ ஏன் பதிலளிக்கவில்லை
என் நிலை கேட்டு.

நீ பருவமடைந்ததில் தவறேதும்
இல்லையென்ற போதும்
அந்த ஏழு நாட்கள் உன் வீட்டில்
உனை சிறை வைத்ததேன்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் 
உன் தம்பியை மாமா என 
சொல்லச் சொல்லி அடித்தற்காகவா, எனை

ஐந்து வருடம் கழித்து 
சந்தித்த எதார்த்த பொழுதினில்
உன் மகளிடம் எனை 
மாமா என கூறச் சொல்லி 
எனை அண்ணனாக்கி சென்றாய்?

0 comments :

Post a Comment

Tricks and Tips