
இதுவரை எத்தனையோ நபர்களால்
அழைக்கப்பட்டிருக்கிறது எனது பெயர்
ஆனால் உன் குரலில் இனித்தது போல்
பிறிதோர் குரலில் இனிக்கவில்லை.
என்னை எனக்கே அழகாய் காட்டிய
மாயக் கண்ணாடி நீ.
உன்னில் உறைந்த ரசமான பிம்பம் நான்.
என்னக்குள்ளும் ஓர் அழகிய ரூபம் இருப்பதை
நீ எனை ரசிக்கும் தருணங்களில் உணர்கிறேன்.
மோகிக்கும் நேரங்களில்
உன்னிடம் நான் சேயாகிறேன்
காதல் தாண்டி கருணை பேசும் நேரங்களில்
நீ எனக்கு தாயாகிறாய்.
கல்லையும்...