Wednesday, December 31, 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள் வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை நான் வாழ்த்துகின்றேன். உழவு என்றொரு வேத வார்த்தையினையே அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா அதற்காக வாழ்த்துகின்றேன்! இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ ஆனால் நான் உண்ணும் வகைவகையான உணவிலும், ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும் பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்! உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும் அவன் பிடித்த கலப்பை...
மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம் மறவா நோய் வருவதும் தான் வயோதிகம். தான் பெற்ற பிள்ளை தன்னை அநாதை இல்லத்தில் விட்டதையும் தன் மகளுக்கு தான் எப்படி பாரமாணோம் என்பதையும் வயதான காலத்திலும் தன்னைக் காக்கும் பிள்ளைகளையும் மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது. ஓடியாட முடியாத அவர்களின் மனதில் நினைவோட்டம் ஆயிரங்கள் வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால் அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள...
முழுப்பரிட்சை தேதி அறிவித்தவுடன் ஆரம்பித்துவிடும் பயமும் பதட்டமும். ஆனபோதிலும் அதைத்தாண்டி ஆனந்தம் தருவது, அதுமுடிந்த விடுமுறை நாட்களில் வரும் ஊர்த்திருவிழா தான் !!! காப்புக்கட்டிய நாளிலிருந்தே மனம் லயிக்கும், மணம் பரப்பும் அப்படியொரு மகரந்த வாசம். அக்னி தகிக்கும் வெய்யில் காந்தலும், ஆடித்திங்கள் முழுமைக்குமென வேயப்பட்ட மூங்கில் கால் பந்தலும், தென்னங்குழையும், பந்தலில் தொங்கும் பலா...

Tuesday, December 30, 2014

அணைக்கப்பட்டன விளக்குகள் எரிகிறது மெழுகு ஒன்று என்னைப்போலவே உருகியபடி. வெளிச்சத்தில் திரைமறைவில் இருந்தவற்றை எல்லாம் இருள் வெளிச்சம் போட்டு காட்டியது. இருநிலவினை மறைத்த இருள்மேகமும் விலகியது. ஆடைகள் எல்லாம் அடுத்தவர்முன்தானே என்றேன். ஆமோதித்தாள் வெட்கம் எனும் உடையவிழ்த்து. உருக உருக ஒளிர்கிறது மெழுகு, உன்னாடை நழுவ நழுவ மிளிர்கிறது உன் அழகு. நீ கூறிய வார்த்தைகள் தேன் ஆதலால் செவிமடுத்தேன் உனைஎடுத்தேன்...
பிழையேதும் செய்யாமலே பிழை செய்தவன் எனப்பட்டேன். பழி செய்யவில்லை பாவம் சுமத்தப்பட்டேன். கண்ணீர் துடைக்கவே நினைக்கிறேன், இருந்த போதும் கண்ணீரின் காரணமே நானெனப்பட்டேன். உறக்கம் தொலைத்தேன் உயிர் இலந்தவனானேன். இத்தனை இருந்தும் இன்னமும் இருக்கிறேன். எனக்கும் கொடுக்கலாம் அமைதிக்கான நோபல் பரிசினை.&nbs...
பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன் தனிமை சுடும் என, ஆனால் அந்த அனல் என்னையும் வந்து வாட்டுமென எண்ணவில்லை. நாம் சேர்ந்திருந்த உறைபனிப் பொழுதுகளிலெல்லாம், தனிமையில் குளிர்காயவே மனம் நினைத்தது. ஆனால் மணம் நினைப்பதெல்லாம் மெய்ப்படுவதில்லையே! தனிமை இதமாகதானே இருக்கும் என்றெண்ணிய என் எண்ணமெல்லாம் (எண்ணம் எல்லாம்) சாம்பலானது தனிமைத்தீயினில். மீண்டும் உறைய வேண்டும் உன் பனிப் பார்வையில், உடனுறைய வேண்டும்...
விலையுயர்ந்த செல்போனை விளையாடி முடித்த கையோடு தொடவந்த தம்பியை அதட்டிய என்னால், மாவு பிசைந்த கையோடு எடுக்கவந்த மனைவியை முறைத்த என்னால், அடுப்புக்கரியொட்டி வந்த அம்மாவிடமிருந்து பத்திரப்படுத்திய என்னால், வியர்வைவடிய வந்த அப்பாவிடமிருந்து விலக்கிய என்னால் முடியவில்லை. என் பச்சிளம் குழந்தை விளையாடி உடைக்கையில் வாய்திறக்க. மேல் கூறிய சுற்றமெல்லாம் இதை பார்த்து எனைச் சுற்றிநின்று சிரிக்க அழும்...
காற்றில் பறக்கிறது யாரோ ஒருவன் கிழித்தெறிந்த காகிதமொன்று. அது, பள்ளிப்பாடம் எழுதிய பாலகனுடயதோ பருவப்பெண் பழகிய கோலக்கிறுக்கல்களோ வட்டிக்கணக்கெழுதிய கணவனின் காகிதமோ வரவு செலவுக்கணக்கெழுதிய மனைவியின் காகிதமோ விடலை ஒருவனின் முதல் காதல் கடிதமோ விரக்தியில் எழுதிய மரண சாசனமோ ஞான கிறுக்கனின் புலம்பல் தத்துவமோ காதல் கசியும் கவிதைத் தொகுப்போ காதலின் சாட்சியோ, இல்லை கண்ணீரின் பாக்கியோ ஒருவேளை...
அதிகாலையில் காணக்கிடைக்கும் யாருமற்ற சாலையின் அழகு, சேலைக்குள் ஒளிந்திருக்கும் பூவையின் வளைவு நெளிவு! மிதமாக பயணி  ரசிக்கலாம் பயணத்தை இரண்டிலுமே...
ஆங்கிலம்... அதன் பாஷையிலே சொல்வதென்றால் தந்தையை டாடியாக்கும் தாயை மம்மியாக்கும் தாய் தமிழ் மரபினை டம்மியாக்கும். கூழ் குடித்து வாழ்ந்த நாட்களில் கூடியிருந்தவரெல்லாம் பிரிவினை கண்டனர் பிட்சா பர்கர் கலாச்சாரத்தில். வேண்டும் ஆங்கிலமும் ஆனால் அளவோடு. இடைவந்த ஒன்றினுக்காய் தலைமுறை தாங்கிநின்ற தனித்தமிழை மறக்கலாமா? சேலையாய் வேட்டியாய் தமிழுடுத்து ஆங்கிலமிருக்கட்டும் கைக்குட்டையாய். தமிழினமே... கைக்குட்டை...
வேண்டாம்! வேண்டாம்!!! இனியொரு பிறவி மானிடனாய். அதுவும் ஆண்மகனாய், அதிலும் தலைமகனாய். நினைத்த மாத்திரத்தில்  கிடைத்தவை எல்லாம் நினைத்த மாதிரி நிலைப்பதில்லை. வாழ்க்கை அதன் அத்துணை முகங்களையும் காட்டிவிட்டது பல பரிமாணங்களில். நான்... தோற்றப்பிழையா?,  இல்லை காட்சிப்பிழையா...? வாழ்கையெனும் நாடகமேடையில் நடிக்கத் தெரிந்தவன் வாழ்கிறான். ஒத்திகை இல்லாமல் நடக்கிறது அரங்கேட்ரமொன்று. மேடையேற வழிகொடுத்த நீ ஏன் இறங்க நினைக்கையில் வழியடைக்கிறாய்! பீஷ்மரைப்போல் எனக்கும் வரமளி நினைத்தவுடன்...

Monday, December 29, 2014

அந்தி சாயும் அழகிய பொழுதினிலே வீடு திரும்புகிறான், ஒயிலான மனைவியுடன் வெயிலாக கோபித்துச் சென்ற வானவன். பொய்க்கோபத்துடன் காத்திருக்கிறாள் புவிமகளும். அடித்த கை அணைக்கவும் வரும் என்று. மெதுவாக நெருங்குகிறான் வானவன் நிலமகளை நோக்கி, ஆயினும் பகலிலே அவன்காட்டிய கோபத்தின் அனல் இன்னும் தணியவில்லை அவளுடம்பினிலே. எப்படி தொடங்குவது என்றென்னியவன் வாய்ச்சொல்லால் தூது அனுப்புகிறான் வாடைகாற்றினை. காத்திருந்தவள் தானே அவளும், உடனே செவிமடுக்கிறாள். இல்லை இல்லை புவியுடல் கொடுக்கிறாள் வாடைகாற்றின் வாயசைவிற்க்கிணங்க. அமைதியாக...
நேற்றொரு அழகிய  மாலை பொழுதில் பார்த்தேன்  அழகான வெண்பஞ்சு மேகங்களுடன்  கார்மேகம் கலவி கொள்வதை . . . இறுதியில் பொழிந்தது மழை நனைந்தது தான்  தற்போதிய நிலை....
உன்னிடம் பேச எத்தனித்துவிட்டு  எதுவும் பேசாமல் போகும்  என் கண்கள் பேசும் பாசை  இன்னுமா புரியவில்லைஉனக்கு....
நேற்று நானும்  அவளும் செல்கையில்  சரியான மழை  இருவரும் நனைந்தோம் ... அவள் மழையிலும்  நான் அவளிளும்.....
என் மடிக்கணினி  ஆக மாட்டாயா பெண்ணே! உன் மனவலைதளத்தில்  என்னை நான் தேட....
ஒரே மழை தான் ஆனால் ஒரே நேரத்தில் இம்சிக்கவும் செய்கிறது மனதுக்குள் இசைக்கவும் செய்கிறது வஞ்சனை செய்கிறது வர்ணிக்கவும் வைக்கிறது என்னை இப்படி கிறுக்கவும் கூட ...
ஒற்றை ரோஜா வாடுகிறது உன் கற்றைக்குழல் சூடக் கிடைக்காமல்... பௌர்ணமி நிலவும் பிறையாய் தேய்கிறது உன் எதிர்பார்ப்பின் ஏமாற்றம் தாளாமல்... அதெப்படி என் இதயம் 'லப்' என திறக்கும் போது உன் இதயம் மட்டும் 'டப்' என கதவடைதுக்கொள்கிறது......
கவிஞனே  இப்போதே நிறுத்திக்கொள்  பெண்களை சிலை என்று வர்ணிப்பதை. ஏனென்றால்  எந்த சிலையும்  பூக்களால் செதுக்கபடுவதில்லை ....
அழகான பெண்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்... எப்படி இப்படி நீங்கள் ... பள்ளி பருவத்தில் பாசம் கட்டினீர்கள் கல்லூரி காதலனை காணாமல் போக செய்தீர்கள் தாலி கொண்ட பின் கொண்டவனை தாளிகிண்றீர்கள் இருந்தபோதிலும் தாய்மை பேணுகின்றீர்கள் ... மறுபடியும் ஒருமுறை ... அழகான பெண்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்... . . . . . . . . பின் குறிப்பு : அழகு என்பது அகத்தின் அழகே ......
முன்பெல்லாம் முழுவதுமாய்  என்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட என் படுக்கையில் இப்போது இடப்பக்கமாய்  ஓர் இடம் விட்டு  படுக்கின்றேன் உன்னக்காக ..... தவறாக நினைக்க வேண்டாம் கனவில் வரும் நீ  கண்ணயர்ந்தால் பள்ளி கொள்ளவே ....
இயற்கையின் காதலன்... அன்பே அந்த மர சாலையில் செல்லாதே காற்று பலமாய் வீசுகிறது பூக்கள் உதிர்ந்து உனக்கு காயம் பட்டு விடபோகிறது பூக்களை காலால் கூட மிதிக்காதேபாதம் புண்ணாகி விடபோகிறதுநீ தொட்டு உடுத்திய பட்டு பரவசபடுகிறதுஇட்டுக்கொண்ட பொட்டு இன்பத்தில் மிதக்கிறதுசூடிக்கொண்ட பூவோ சூழ்நிலை மறுக்கிறது. இது தற்செயலா இல்லை உன்செயலா என்று புரியவில்லை எனக்கு... நீ கோபம் கொண்ட போதெல்லாம் நானிருக்கும் பகுதியில் இயற்க்கை சீற்றம். என் இயற்கையாய் ஆனவளே நான் விரும்பும் இயற்கையை போல உன்னையும் காதலிக்கி...
என் உயிராய் ஆனவளே உன் மெய்யாக நானிருப்பேன் உன்னுடனே. உயிர்மெய்யாக நம் காதல் விளங்கட்டும்... திசையெங்கும் மணக்கும் தமிழ் போ...
நீ ஆயிரம் முறை  என்னை திட்டினாலும்  தாங்கிகொள்ளும்  என் இதயம். ஆனால் உன் சில நொடி  மவுனத்தை மட்டும் தாங்குவதில்லை....
படித்ததில் பிடித்தது ... ...................................... உன்னை பார்க்கும்போதுதான் கண்கள் இருப்பதை உணர்ந்தேன் ... அதே போல ... உன்னை காணாத போது தான் அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன் ......
அடிப்புறம் என் மடிசேர்த்து தலைப்புறம் என் தோள் சாய்த்து  நடுப்புறம் தந்தியினை என் என் விரல் மீட்ட மோக ராகமிசைக்கும்  ...வீணையடி நீ எனக்க...
புதிதாக வாங்கிய  ட்யூப் லைட் கூட  உன்னை பார்த்த நொடியிலிருந்து  கண்னடித்துகொண்டே இருக்கிறது....
மூங்கிலில் மட்டும்தான் குழலிசை இசைக்கமுடியுமா? என்னவள் என் மூச்சுக் குழலிலும் தான் இசைக்கிறாள் முத்தத்துவாரம் வழியாக. என்ன, ஒரே ஒரு வித்தியாசம் முதல்சொன்னதில் உள்சென்று  இசைதந்த காற்று  இரண்டாவதில் உறிஞ்சப்பட்டுஇசைதருகிறது...
விடிந்ததும் காணக்கிடைத்தது முழுவதுமாய் சிவந்திருந்த உன் உடல்... அது அந்திச்சூரியனை இரவில் விழுங்கிய கடல்.....
நேற்றிரவு ஒரு பயங்கரமான கனவு ... யாரென்றே தெரியாத, கோட் சூட் அணிந்த சில வெளிநாட்டவர்களும், சில உள்ளூர் காக்கி சட்டைகளும் நம் வீட்டின் முன்பே கும்பலாய். என்னை அழைத்து உன்னை கேட்கிறார்கள், நீ திருடீ என்று... நான் ஆவேசபட்டவனாய் ஏன்? எதற்கு? என்ன காரணம்? என்று கேட்டால் அவர்கள் கூறியது... வர வர நிலவின் ஒளி குறைந்து கொண்டே செல்கிறதாம்... தமிழகத்தின் ஒரு பகுதியில் மட்டும் அளவுக்கு அதிகமாய் பிரகாசிக்கின்றதாம்... அலசி ஆராய்ந்ததில் அது நம் வீடு என்றறிந்து இங்கு வந்துள்ளனர்... ஆதாவது நிலவொளியை நீ திருடிகொண்டாயாம்... அவர்கள்...
மழையில் நீ விளையாடுவதை பார்க்கும் பொழுது... மழை என்பதே  உன்னை தொட்டு விளையாட  வருணன் ஏற்படுத்திக் கொண்ட ஓர் வழிவகை தானோ!...என்று என்னதோனுகின்றது... மழைபெய்யும் பொழுது நனைவதுமரங்களும், மனிதர்களும்இப்புவியில் உள்ளஇன்னபிற பொருட்களும் மட்டுமல்லாதுநேசம் கொண்ட இரு உள்ளங்களும் தானே! நம்மைத்தவிர வேறு எவரோருவரால்இந்த மழையின் ஒவ்வொரு துளிகளையும்ருசித்திருக்க முடியும்... நனைவது அழகாஇல்லை நனைவதை ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்உன்னை நனைவிப்பது தான் அழகு என்றுஜோராய்...
மண்ணில் வந்தாள் மணித்தாரகை இவள் இறகு இல்லாத என் தேவதை. இன்று கண்டாள் உதயவிழா என் கைகளில் மிதக்கின்றாள் இந்த வெள்ளிநிலா. நகர்ந்தாடும் நந்தவனம்இனியிவளே என் வீட்டின் பூந்தோரணம்.நிலவொளியாய் இவள் வதணம்இவளே நான் இசைத்த முதல் சரணம்.உனை கையேந்திய நேரம், அதுஒரு துளி கண்ணீர்ஓராழி சந்தோசம்இப்படிக் கலவையான ஓர் கனம்.எனை அப்பனாக்கி பிறந்த ஏந்திழை, இவள் என் மகள...
சொர்கத்தின் மினியெட்சர் நீயாக... அந்தக் கண்ணன் வாய் திறந்து அகிலத்தை காட்டியதை நானிருந்து பார்த்திலேன். ஆனால் பால் மனம் வீசும் உன் குமுதவாய் இதழ் விரித்த பொழுதினில் அதில்எனக்கான உலகத்தை பார்க்கிறேன். உன் பிஞ்சு விரலால் எனைப் பற்றுகையில் என் இறைவனே எனைத் தீண்டும் இறைமையை உணர்கிறேன். என்னிரு விரலில் உன் ஒரு பாதம் நிறைந்து விடுகிறது இந்த பூம்பாதத்தில் என் உலகமே அடங்கிவிடுகிறது. பிறந்து மூன்று நாட்களே ஆன உனக்கின்னும் கழுத்து நிற்கவில்லை - இது இயல்பு ஆனால் உனைக்கண்ட நாளிலிருந்தே நான் இப்புவியிலே...
கவிஞன்... இவன், காதலையும் கண்ணீரையும் ஒருசேர ருசித்து பழகியவன். பாடுபொருளாக தன் பாடுகளையே பதிப்பவன்சமூக அவலங்களை கரம் கொண்டும் மிதிப்பவன். இவன், குளிரில் வியர்ப்பவன் வெய்யிலில் குளிர்பவன் தன் எழுத்துக்களால் ஒளிர்பவன். பள்ளியிலே காதல் பயின்றவன் விடலையிலே விரகம் இயற்றியவன் கூடல் பொழுதுகளில் குளிர்காய்பவன் பந்தக்கூட்டில் சிக்கியபின் தன் வறுமையை, மனம் கொண்ட வெறுமையை எழுத்துகளில் விற்ப்பவன். செல்வம் குறைந்தவன் சொல்வளம் நிறைந்தவன். காதல் இயற்ற பெண்மோகம் கொள்பவன் கருத்தாய் தான்பிறந்த மண்மீது தணியாத...
இதயம் ஒரு கோவில்.. என்றெழுதினாய். ஆம். எங்கள் இதயக்கோவிலின்இசைதெய்வம் நீயல்லவா..! அம்மாசொன்ன ஆரிரரோ.. என்றெழுதினாய். ஆனால் உன் ஆரிரரோவில் எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..! நிலா அது வானத்துமேல.. என்றெழுதினாய். ஆனால் உன்பாடலைக்கேட்க நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..? இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே.. என்றெழுதினாய். எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும் உன்னிசையிலல்லவா...
நீ சேலை கட்டிகொண்டால் வானில் கார்மேகக் கூட்டங்கள்.  உன் புடவையின் சிறு விலகல்கள், அழகிய சிறு தூறல்கள். நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும், ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்....
நனைவது அழகா இல்லை நனைவதை ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்உன்னை நனைவிப்பது தான் அழகு என்று  ஜோராய் பொழிந்து கொண்டிருக்கிறது இந்த வானம்.....
Tricks and Tips