Monday, December 29, 2014

சொர்கத்தின் மினியெட்சர் நீயாக... அந்தக் கண்ணன் வாய் திறந்து அகிலத்தை காட்டியதை நானிருந்து பார்த்திலேன். ஆனால் பால் மனம் வீசும் உன் குமுதவாய் இதழ் விரித்த பொழுதினில் அதில்எனக்கான உலகத்தை பார்க்கிறேன். உன் பிஞ்சு விரலால் எனைப் பற்றுகையில் என் இறைவனே எனைத் தீண்டும் இறைமையை உணர்கிறேன். என்னிரு விரலில் உன் ஒரு பாதம் நிறைந்து விடுகிறது இந்த பூம்பாதத்தில் என் உலகமே அடங்கிவிடுகிறது. பிறந்து மூன்று நாட்களே ஆன உனக்கின்னும் கழுத்து நிற்கவில்லை - இது இயல்பு ஆனால் உனைக்கண்ட நாளிலிருந்தே நான் இப்புவியிலே...
கவிஞன்... இவன், காதலையும் கண்ணீரையும் ஒருசேர ருசித்து பழகியவன். பாடுபொருளாக தன் பாடுகளையே பதிப்பவன்சமூக அவலங்களை கரம் கொண்டும் மிதிப்பவன். இவன், குளிரில் வியர்ப்பவன் வெய்யிலில் குளிர்பவன் தன் எழுத்துக்களால் ஒளிர்பவன். பள்ளியிலே காதல் பயின்றவன் விடலையிலே விரகம் இயற்றியவன் கூடல் பொழுதுகளில் குளிர்காய்பவன் பந்தக்கூட்டில் சிக்கியபின் தன் வறுமையை, மனம் கொண்ட வெறுமையை எழுத்துகளில் விற்ப்பவன். செல்வம் குறைந்தவன் சொல்வளம் நிறைந்தவன். காதல் இயற்ற பெண்மோகம் கொள்பவன் கருத்தாய் தான்பிறந்த மண்மீது தணியாத...
இதயம் ஒரு கோவில்.. என்றெழுதினாய். ஆம். எங்கள் இதயக்கோவிலின்இசைதெய்வம் நீயல்லவா..! அம்மாசொன்ன ஆரிரரோ.. என்றெழுதினாய். ஆனால் உன் ஆரிரரோவில் எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..! நிலா அது வானத்துமேல.. என்றெழுதினாய். ஆனால் உன்பாடலைக்கேட்க நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..? இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே.. என்றெழுதினாய். எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும் உன்னிசையிலல்லவா...
நீ சேலை கட்டிகொண்டால் வானில் கார்மேகக் கூட்டங்கள்.  உன் புடவையின் சிறு விலகல்கள், அழகிய சிறு தூறல்கள். நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும், ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்....
நனைவது அழகா இல்லை நனைவதை ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்உன்னை நனைவிப்பது தான் அழகு என்று  ஜோராய் பொழிந்து கொண்டிருக்கிறது இந்த வானம்.....
Tricks and Tips