அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
நம்மை மன்னன் ஆண்டான்
மாற்று தேசத்தான் ஆண்டான்
இது நாம் ஆண்டுகொண்டிருக்க
வேண்டிய தருணமிது.
ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு
ஆனாலும் இன்றளவும்
நமை ஆள்வது நாம் தானா....
என் காது மடல் வருடி
நீ இட்ட முத்தத்திலே
புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை
துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை.
காதினில் தொடங்கி
கழுத்தேறி வளைந்து
பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து
மணிக் கழுத்தினில் ஒன்று
கீழ் இறங்கி மார்பினில் ஒன்று
என நீ கொடுத்த முத்தத்தில்
கிறங்கிப்போனேன்.
என் உடல் மணக்கிறது
உன் எச்சிலின் ஏகாந்த வாசம்.
என்ன வரைகிறாய் என் முதுகினில்....
என் காதல் கணவா
ஏன் இப்படி?
காதலிக்கும் போது கை பிடிக்க
அனுமதி வேண்டியே அவ்வளவு
கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி.
என் இதழ் தீண்டாதா என நீ
ஏங்கிய நாட்களை நானறிவேன்....
விண்ணவரும் வியந்து போகும் பேரழகு
அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு.
தரைதொடும் உன் கார் குழலென்ன
கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா
நிலவினை வெட்டி ஒட்டி
வைத்ததுதானா உன் நெற்றி
பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள்
புலியெனப் பாயவரும் என்னை
சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து
எனை அடக்குவதென்ன....
எழுவாய் தமிழனே எழுவாய்!
வந்துவிட்டது தைத் திருநாள்.
வாசனை திரவியங்கள் மணக்கும்
மேனி கொண்ட நமக்கு
கருக்கலில் கண்விழித்து
காளை பூட்டி ஏர் உழ
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
முப்போகம் விளைவித்தவனின்
முன்னுரை தெரியுமா?
அரிசியினை அன்னமாய்
மட்டுமே அறிந்த நமக்கு
நெல்லினை தெய்வமாகவும்
அரிசியினை பிரசாதமாகவும்...