Monday, December 29, 2014

ஒற்றை ரோஜா வாடுகிறது
உன் கற்றைக்குழல் சூடக் கிடைக்காமல்...
பௌர்ணமி நிலவும் பிறையாய் தேய்கிறது
உன் எதிர்பார்ப்பின் ஏமாற்றம் தாளாமல்...
அதெப்படி
என் இதயம் 'லப்' என திறக்கும் போது
உன் இதயம் மட்டும் 'டப்' என கதவடைதுக்கொள்கிறது...
கவிஞனே 

இப்போதே நிறுத்திக்கொள் 
பெண்களை சிலை என்று வர்ணிப்பதை.

ஏனென்றால் 
எந்த சிலையும் 
பூக்களால் செதுக்கபடுவதில்லை ...
அழகான பெண்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்...
எப்படி இப்படி நீங்கள் ...
பள்ளி பருவத்தில் பாசம் கட்டினீர்கள்
கல்லூரி காதலனை காணாமல் போக செய்தீர்கள்
தாலி கொண்ட பின் கொண்டவனை தாளிகிண்றீர்கள் 
இருந்தபோதிலும் தாய்மை பேணுகின்றீர்கள் ...
மறுபடியும் ஒருமுறை ...
அழகான பெண்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்...
.
.
.
.
.
.
.
.
பின் குறிப்பு : அழகு என்பது அகத்தின் அழகே ...
முன்பெல்லாம் முழுவதுமாய் 
என்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட
என் படுக்கையில்
இப்போது இடப்பக்கமாய் 
ஓர் இடம் விட்டு 
படுக்கின்றேன் உன்னக்காக .....

தவறாக நினைக்க வேண்டாம் 
கனவில் வரும் நீ 

கண்ணயர்ந்தால் பள்ளி கொள்ளவே ...
இயற்கையின் காதலன்...
அன்பே அந்த மர சாலையில் செல்லாதே
காற்று பலமாய் வீசுகிறது
பூக்கள் உதிர்ந்து உனக்கு காயம் பட்டு விடபோகிறது 
பூக்களை காலால் கூட மிதிக்காதே
பாதம் புண்ணாகி விடபோகிறது
நீ தொட்டு உடுத்திய பட்டு பரவசபடுகிறது
இட்டுக்கொண்ட பொட்டு இன்பத்தில் மிதக்கிறது
சூடிக்கொண்ட பூவோ சூழ்நிலை மறுக்கிறது.
இது தற்செயலா இல்லை உன்செயலா என்று புரியவில்லை எனக்கு...
நீ கோபம் கொண்ட போதெல்லாம்
நானிருக்கும் பகுதியில் இயற்க்கை சீற்றம்.
என் இயற்கையாய் ஆனவளே
நான் விரும்பும் இயற்கையை போல
உன்னையும் காதலிக்கிறேன்
Tricks and Tips