Wednesday, December 31, 2014



முழுப்பரிட்சை தேதி அறிவித்தவுடன்
ஆரம்பித்துவிடும் பயமும் பதட்டமும்.

ஆனபோதிலும் அதைத்தாண்டி
ஆனந்தம் தருவது, அதுமுடிந்த
விடுமுறை நாட்களில் வரும்
ஊர்த்திருவிழா தான் !!!

காப்புக்கட்டிய நாளிலிருந்தே
மனம் லயிக்கும், மணம் பரப்பும்
அப்படியொரு மகரந்த வாசம்.

அக்னி தகிக்கும் வெய்யில் காந்தலும்,
ஆடித்திங்கள் முழுமைக்குமென
வேயப்பட்ட மூங்கில் கால் பந்தலும்,
தென்னங்குழையும், பந்தலில்
தொங்கும் பலா வகையும்,
சரம் சரமாய் சாத்துக்குடி வகையறாக்களும்,
பந்தலில் பளிச்சிடும் பப்ளிமாஸ் பழங்களும்,
கூந்தப்பனை தோரணமும், தார் தள்ள
வாழை மரம் கட்டிய காரணமும்
ஊர்த்திருவிழா தான் !!!

அல்லிநகரத்து மைக்செட்டும்
காதை கிழிக்கும் ஒலிபெருக்கிகளும்
தனிக் கங்கென தகிக்கும் சீரியல் செட்டுகளும்
கால்பந்து விளையாடும் யானை லைட்செட்டும்
சாலை நடுவே ஓங்கி ஒளிரும் அம்மன் ஆர்ச் சீரியலும்
சுவரெங்கும் பசை காயாத போஸ்டர்களும்
அழகாக மாற்றிவிடும் தெருவையே
ஓர் இரவிலே!

மூங்கில் வெட்ட கும்பக்கரை
பழவேட்டைக்கு சோத்துப்பாறை
மூங்கில் சுமந்துவரும் வண்டி கொடுத்த அலப்பரை
அந்த நாளில் நாங்கள் அறிந்ததில்லை
ஆனந்ததிற்கு வரைமுறை.

வெள்ளனா எழுந்து
வெண்ணீரில் குளித்து
புதுத்துணி அணிந்து, அன்றுண்ட
அம்மா சுட்ட இட்டலியும்,
மல்லிச்சட்டினியும் மனம் மறக்கவில்லை இன்னமும்.

கரகத்தில் ஆடிவரும் அம்மனின் அழகும்
அரிவாள் மேல் ஆடிவரும் கருப்பனின் மிரட்டல் தொனியும்
பயபக்தி (பயத்தினால் வந்த பக்தி) பொழுதுகள்.

சாயங்காலம் சரக்கடித்து
சண்டையில் சட்டை கிழிந்து
சாக்கடையில் பிரண்டெழுந்து, விடிந்ததும்
நெற்றியில் பட்டையும்,
மல்லுவேட்டி சட்டையும்
அணிந்துவரும் சண்டியர்கள்
சிரிப்பூட்டும் இம்சை அரசர்கள்.

மூன்று நாள்கழித்து மறுபூசை
ராகம் ராகமாய் ராட்டினங்கள்
வேடிக்கை பார்க்க மட்டுமென திருவிழா கடைகள்
ஆடியேந்தி வரும் அலங்கரித்த தீச்சட்டிகள்
அரைகுறை ஆடையில் ஆடும் கரகாட்டகாரர்கள்
மதுரை கலைநிலா குழுவினரின் ஆடலும்பாடலும்
அப்பப்பா!!!

ஓர் கனவு வந்து கிளருகிறது
பள்ளிப்பருவத்தோடு புதைந்துபோன
ஊர்திருவிழாவினை.

இப்படியொரு திருவிழாவையே மறந்தொரு ஊரினில்
பத்துமணிக்கு பிறகெழுந்து
நாயர்கடை சாமியானா பந்தலின் கீழ் நின்று
வெந்தும் வேகாத இட்டலியை
தண்ணீர்ச்சட்னியோடு சேர்த்து விழுங்கிக்கொண்டே
அசைபோடுகின்றேன் ஆழ்தூக்கத்துக்
கனவு கொடுத்த அழகிய நினைவுகளை.

Tuesday, December 30, 2014



அணைக்கப்பட்டன விளக்குகள்
எரிகிறது மெழுகு ஒன்று
என்னைப்போலவே உருகியபடி.

வெளிச்சத்தில் திரைமறைவில்
இருந்தவற்றை எல்லாம் இருள்
வெளிச்சம் போட்டு காட்டியது.

இருநிலவினை மறைத்த
இருள்மேகமும் விலகியது.

ஆடைகள் எல்லாம்
அடுத்தவர்முன்தானே என்றேன்.

ஆமோதித்தாள் வெட்கம்
எனும் உடையவிழ்த்து.

உருக உருக ஒளிர்கிறது மெழுகு, உன்னாடை
நழுவ நழுவ மிளிர்கிறது உன் அழகு.

நீ கூறிய வார்த்தைகள் தேன்
ஆதலால் செவிமடுத்தேன்
உனைஎடுத்தேன் , நீ கூறியவை

"நீ தீண்ட நான் சுரப்பேன் அமுதசுரபியாய்
அமுதுண்டு எனை நனைப்பாய் பேரருவியாய்"

சரமாரியாய் பொழிந்த பொழுதிலும்
சந்தோசிக்கிறாய், என் மோக அரக்கி
கொடுப்பாய் உனை உருக்கி.

இதழ் சுளிப்பிலே இன்பமுரைத்தாய்
உதடு கவ்வியே உயிர் குடித்தாய்.

பூவிதழில் மட்டுமா தேன்துளி
செங்காம்புகளும் சொட்டுகின்றதே.

மேடுகளில் ஏறினேன்
சரிவுகளில் சறுக்கினேன்
பள்ளத்தில் புதைந்தேன்.

பாவி புதைகுழி முழுக்க தேன்துளி
இனி எழும்பவா மனம் நினைக்கும்.


பிழையேதும் செய்யாமலே
பிழை செய்தவன் எனப்பட்டேன்.

பழி செய்யவில்லை
பாவம் சுமத்தப்பட்டேன்.

கண்ணீர் துடைக்கவே நினைக்கிறேன்,
இருந்த போதும் கண்ணீரின் காரணமே நானெனப்பட்டேன்.

உறக்கம் தொலைத்தேன்
உயிர் இலந்தவனானேன்.

இத்தனை இருந்தும்
இன்னமும் இருக்கிறேன்.

எனக்கும் கொடுக்கலாம்
அமைதிக்கான நோபல் பரிசினை. 


பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்
தனிமை சுடும் என,
ஆனால் அந்த அனல்
என்னையும் வந்து
வாட்டுமென எண்ணவில்லை.

நாம் சேர்ந்திருந்த
உறைபனிப் பொழுதுகளிலெல்லாம்,
தனிமையில் குளிர்காயவே
மனம் நினைத்தது.

ஆனால் மணம் நினைப்பதெல்லாம்
மெய்ப்படுவதில்லையே!

தனிமை இதமாகதானே இருக்கும்
என்றெண்ணிய என்
எண்ணமெல்லாம் (எண்ணம் எல்லாம்)
சாம்பலானது தனிமைத்தீயினில்.

மீண்டும்

உறைய வேண்டும்
உன் பனிப் பார்வையில்,

உடனுறைய வேண்டும் உன்னுடன்
அன்பெனும் ஒரே போர்வையில்.

உடனடித்தேவை என் பாவை.

வந்தனைப்பாயா (வந்து அணைப்பாயா)
தனிமைத் தீயை!!!


விலையுயர்ந்த செல்போனை

விளையாடி முடித்த கையோடு
தொடவந்த தம்பியை அதட்டிய என்னால்,

மாவு பிசைந்த கையோடு எடுக்கவந்த
மனைவியை முறைத்த என்னால்,

அடுப்புக்கரியொட்டி வந்த
அம்மாவிடமிருந்து பத்திரப்படுத்திய என்னால்,

வியர்வைவடிய வந்த அப்பாவிடமிருந்து
விலக்கிய என்னால் முடியவில்லை.

என் பச்சிளம் குழந்தை விளையாடி உடைக்கையில்
வாய்திறக்க.

மேல் கூறிய சுற்றமெல்லாம்
இதை பார்த்து எனைச் சுற்றிநின்று சிரிக்க
அழும் என் குழந்தை கேட்கும் பொழுதினில்
மறுபடியும் கொடுக்கிறேன்.
என் விலையுயர்ந்த செல்போனை
இல்லை! இல்லை!
என் செல்லம் உடைத்த செல்லபோனை.
Tricks and Tips