Showing posts with label Tamizhkavi. Show all posts
Showing posts with label Tamizhkavi. Show all posts

Monday, December 29, 2014

என் உயிராய் ஆனவளே
உன் மெய்யாக
நானிருப்பேன் உன்னுடனே.

உயிர்மெய்யாக நம் காதல் விளங்கட்டும்...
திசையெங்கும் மணக்கும் தமிழ் போல.
நீ ஆயிரம் முறை 
என்னை திட்டினாலும் 
தாங்கிகொள்ளும் 
என் இதயம்.
ஆனால் உன் சில நொடி 
மவுனத்தை மட்டும் தாங்குவதில்லை...
அடிப்புறம் என் மடிசேர்த்து
தலைப்புறம் என் தோள் சாய்த்து 
நடுப்புறம் தந்தியினை என் என் விரல் மீட்ட
மோக ராகமிசைக்கும் 
.
.
.
வீணையடி நீ எனக்கு!
புதிதாக வாங்கிய 
ட்யூப் லைட் கூட 
உன்னை பார்த்த நொடியிலிருந்து 
கண்னடித்துகொண்டே இருக்கிறது...
மூங்கிலில் மட்டும்தான்
குழலிசை இசைக்கமுடியுமா?

என்னவள் என்
மூச்சுக் குழலிலும் தான் இசைக்கிறாள்
முத்தத்துவாரம் வழியாக.

என்ன, ஒரே ஒரு வித்தியாசம்
முதல்சொன்னதில் உள்சென்று 
இசைதந்த காற்று 
இரண்டாவதில் உறிஞ்சப்பட்டுஇசைதருகிறது.
விடிந்ததும் காணக்கிடைத்தது
முழுவதுமாய் சிவந்திருந்த
உன் உடல்...
அது அந்திச்சூரியனை
இரவில் விழுங்கிய கடல்...
நேற்றிரவு ஒரு பயங்கரமான கவு ...
யாரென்றே தெரியாத,
கோட் சூட் அணிந்த சில வெளிநாட்டவர்களும்,
சில உள்ளூர் காக்கி சட்டைகளும் நம் வீட்டின் முன்பே கும்பலாய்.
என்னை அழைத்து உன்னை கேட்கிறார்கள், நீ திருடீ என்று...
நான் ஆவேசபட்டவனாய் ஏன்? எதற்கு? என்ன காரணம்? என்று கேட்டால் அவர்கள் கூறியது...
வர வர நிலவின் ஒளி குறைந்து கொண்டே செல்கிறதாம்...
தமிழகத்தின் ஒரு பகுதியில் மட்டும் அளவுக்கு அதிகமாய் பிரகாசிக்கின்றதாம்...
அலசி ஆராய்ந்ததில் அது நம் வீடு என்றறிந்து இங்கு வந்துள்ளனர்...
ஆதாவது நிலவொளியை நீ திருடிகொண்டாயாம்...
அவர்கள் உன்னை நோக்கி எத்தனிக்கையில்
பதறிபோய் விழித்து கொண்டேன்...
அருகில் உறங்கிகொண்டிருந்த உன்னை பார்க்கிறேன்
முகம் மறைத்து நீ அழகாய் உறங்கிகொண்டிருந்ததை பார்க்கையில் அவர்கள் கூறியது உண்மை தானோ என்று நினைக்க தோன்றுகிறது...
சிரித்துக்கொண்டே உறக்கத்தை தொடர நினைக்கையில்
புதிதாய் ஒரு பயம்,
நிலவின் ஒளியை திருடினாய் என்று உன்னை தேடி வந்தவர்கள்
நிலாவையே என் உடமை ஆக்கிக்கொண்டேன் என்று (உன் கணவனாகையால்) என் கனவிலும் வருவார்களோ என்று...
மழையில் நீ விளையாடுவதை பார்க்கும் பொழுது...

மழை என்பதே 
உன்னை தொட்டு விளையாட 
வருணன் ஏற்படுத்திக் கொண்ட 
ஓர் வழிவகை தானோ!...

என்று என்னதோனுகின்றது...



மழைபெய்யும் பொழுது நனைவது
மரங்களும், மனிதர்களும்
இப்புவியில் உள்ள
இன்னபிற பொருட்களும் மட்டுமல்லாது

நேசம் கொண்ட இரு உள்ளங்களும் தானே!



நம்மைத்தவிர வேறு எவரோருவரால்
இந்த மழையின் ஒவ்வொரு துளிகளையும்
ருசித்திருக்க முடியும்...


நனைவது அழகா
இல்லை நனைவதை ரசிப்பது அழகா
என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்

உன்னை நனைவிப்பது தான் அழகு என்று
ஜோராய் பொழிந்து கொண்டிருக்கிறது இந்த வானம்.
மண்ணில் வந்தாள் மணித்தாரகை
இவள் இறகு இல்லாத என் தேவதை.
இன்று கண்டாள் உதயவிழா
என் கைகளில் மிதக்கின்றாள் இந்த வெள்ளிநிலா.
நகர்ந்தாடும் நந்தவனம்
இனியிவளே என் வீட்டின் பூந்தோரணம்.
நிலவொளியாய் இவள் வதணம்
இவளே நான் இசைத்த முதல் சரணம்.
உனை கையேந்திய நேரம், அது
ஒரு துளி கண்ணீர்
ஓராழி சந்தோசம்
இப்படிக் கலவையான ஓர் கனம்.
எனை அப்பனாக்கி பிறந்த ஏந்திழை, இவள் என் மகள்!
சொர்கத்தின் மினியெட்சர் நீயாக...
அந்தக் கண்ணன் வாய் திறந்து
அகிலத்தை காட்டியதை நானிருந்து பார்த்திலேன்.
ஆனால் பால் மனம் வீசும் உன் 
குமுதவாய் இதழ் விரித்த பொழுதினில் அதில்
எனக்கான உலகத்தை பார்க்கிறேன்.
உன் பிஞ்சு விரலால் எனைப் பற்றுகையில்
என் இறைவனே எனைத் தீண்டும் இறைமையை உணர்கிறேன்.
என்னிரு விரலில் உன் ஒரு பாதம் நிறைந்து விடுகிறது
இந்த பூம்பாதத்தில் என் உலகமே அடங்கிவிடுகிறது.
பிறந்து மூன்று நாட்களே ஆன உனக்கின்னும்
கழுத்து நிற்கவில்லை - இது இயல்பு
ஆனால் உனைக்கண்ட நாளிலிருந்தே நான்
இப்புவியிலே நிலைகொண்டு நில்லாதது போன்றொரு மிதப்பெனக்கு.
பூவுலகில் ஒழுங்காக வாழ்ந்தவர்களுக்கு சொர்க்கத்தில் இடமாம்,
நான் ஒழுங்காக வாழ்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் அந்த சொர்கதையே இறைவன் எனக்கென பரிசளிதிருக்கிறான் - நீயாக
கவிஞன்...
இவன்,
காதலையும் கண்ணீரையும் ஒருசேர ருசித்து பழகியவன்.
பாடுபொருளாக தன் பாடுகளையே பதிப்பவன்
சமூக அவலங்களை கரம் கொண்டும் மிதிப்பவன்.
இவன்,
குளிரில் வியர்ப்பவன்
வெய்யிலில் குளிர்பவன்
தன் எழுத்துக்களால் ஒளிர்பவன்.
பள்ளியிலே காதல் பயின்றவன்
விடலையிலே விரகம் இயற்றியவன்
கூடல் பொழுதுகளில் குளிர்காய்பவன்
பந்தக்கூட்டில் சிக்கியபின்
தன் வறுமையை, மனம் கொண்ட வெறுமையை
எழுத்துகளில் விற்ப்பவன்.
செல்வம் குறைந்தவன்
சொல்வளம் நிறைந்தவன்.
காதல் இயற்ற பெண்மோகம் கொள்பவன்
கருத்தாய் தான்பிறந்த மண்மீது
தணியாத தாகம் கொள்பவன்.
தாய் சொன்ன தமிழ் கேட்டு
தமிழே தன் தாயென்பவன்
தமிழ் சொல்லி தாயும் ஆனவன்.
எழுத்தாள்பவன்
எரிமலையிவன்
எழுந்தோங்கி நிற்ப்பவன்
எந்நேரமும் தமிழேக்கம் கொண்டவன்.
ஏட்டிக்கு போட்டியென பேசினாலும்
எதுகை மோனை காப்பவன்.
படுக்கை அறையிலும் பாடல் இயற்றுபவன், இவன்
முதலிரண்டு பாலையும் படித்து மறந்து
மூன்றாம் பாலிலே மூழ்கித் திளைப்பவன்.
மண்ணின் மணத்தை
பேனா மை கொண்டு .மலரச்செய்பவன்.
பேரானந்தத்தையும் பெருஞ்சோகத்தையும்
இயற்றும் பொழுதுகளிளெல்லாம் இயம்புவன்.
வாழ்கையின் எல்லா பரிமாணங்களையும்
வார்த்தைகளின் மூலமாக வாழ்கின்றவன்
ஆள்கின்றவன் .
வரிகளுக்கேற்ப வாழ்ந்துகொண்டிருப்பதால்
இன்பத்தில் ஆடாதவன்
துன்பத்தில் துவண்டுவிடாதவன்.
நிராகரிக்கப்படுகையில் சாணக்கியன்
பேர் புகழ் பெற்றாலும் சாமானியன்.
தலைசாய்ந்தாலும் தமிழென்பதால் என்னவோ
பலரின் பார்வைக்கு கிருக்கனிவன்.
முண்டாசுக்கவிஞனின் வழித்தோன்றலாகையால்
தமிழுக்கோர் பாரதியிவன்
தமிழ்தேருக்கோர் சாரதியிவன்.
எழுத்துக்களாலே பேசுவதாலென்னவோ
வாய்திறவா வள்ளுவன் இவன்!
நீ சேலை கட்டிகொண்டால்
வானில் கார்மேகக் கூட்டங்கள். 

உன் புடவையின் சிறு விலகல்கள்,
அழகிய சிறு தூறல்கள்.

நாமிருவர் தனித்திருக்கையில் மட்டும்,
ஆரவாரமாய் பொழியும் அடைமழை நேரங்கள்...
நனைவது அழகா
இல்லை நனைவதை
ரசிப்பது அழகாஎன்று நாம் விவாதித்துக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால்
உன்னை
நனைவிப்பது தான்
அழகு என்று
 
ஜோராய் பொழிந்து
கொண்டிருக்கிறது இந்த வானம்...
Tricks and Tips